டெல்லி: கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும், தேவையான முன்னேற்பாடுகளை செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.