பெங்களூரு: கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதர் என்பவர் கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் பெலகாவியின் காதே பஜார் அருகே கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின் (69) கார் ஒரு ஆட்டோ மீது மோதியது. ஸ்ரீநிவாஸ் லாட்ஜுக்கு லாவூ மம்லேதர் சென்றபோது அவரது கார் ஆட்டோ மீது மோதியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், லாட்ஜ் வாசலிலேயே அவரை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்து பலியானார். லாட்ஜின் சிசிடிவி கேமராவில் இது பதிவாகியிருந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பஜார் போலீசார் உயிரிழந்த கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
The post கர்நாடகாவில் பரபரப்பு கோவா மாஜி எம்எல்ஏவை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் appeared first on Dinakaran.