சென்னை: மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என்று ஆட்சியரிடம் மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க 120 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூடுதலாக 1.5 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும் என்று மதுரையில் அமைச்சர் பேட்டி அளித்தார்.