மயிலாடுதுறை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலைக்கு முன்விரோதம் மட்டுமே காரணம்: காவல்துறை விளக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலைக்கு முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறையில் முன்விரோதமே காரணமாகவே இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மதுவிற்பனை காரணம் அல்ல எனவும் மாவட்ட காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். இரட்டைக் கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக தினேஷ் என்பவரை தாக்க 3 பேர் முயற்சி செய்தபோது, தடுக்க வந்த அவரது நண்பர்கள் ஹரிஷ், அஜய் மற்றும் சக்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஹரிஷ், சக்தி உயிரிழந்த நிலையில் அஜய்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

The post மயிலாடுதுறை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலைக்கு முன்விரோதம் மட்டுமே காரணம்: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: