புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ரசி, தேவா, ஆதி ஆகியோரை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். முன்பகை காரணமாக ரவுடி சத்யா தனது கூட்டாளிகளை ஏவி நேற்று 3 பேரையும் கொலை செய்துள்ளார். கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரவுடி சத்யா சிக்கினார். 3 பேரையும் கடத்தி பாழடைந்த கட்டடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி கொன்றதாக ரவுடி சத்யா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
The post புதுச்சேரியில் மூவர் கொலை: பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.