பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழ்நாடு சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆறு பெட்டிகளுடன் வர வேண்டும் என்றும் அதற்கான உரிய வாகன வசதி பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதுகாப்புக்கு காவல்துறை உடன் வரவேண்டும் என்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருட்களை எடுத்துச் செல்லும் போது அவற்றை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் வரவேண்டும் என்றும் ஒட்டுமொத்த நடைமுறையையும் படம்பிடிக்க ஒளிப்பதிவாளர்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று காலை தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ். பி. விமலா, கூடுதல் எஸ். பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பிட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்துள்ளனர்.
இன்று காலை சரியாக 11.10 மணிக்கு நீதிபதி மோகன் இருக்கையில் அமர்ந்தார். அப்போது ஜெ. தீபா சார்பில் ஆஜரான வக்கீல், ஆபரணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆகவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்காமல், உச்சநீதிமன்றம் தடைவிதித்தால் பார்க்கலாம், அதுவரை ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடரட்டும் என்று உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆபரணங்கள் சரி பார்த்து வழங்கும் பணி தொடங்கியது. ஒப்படைக்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னைக்கு எடுத்து வரப்பட்டன.
The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு: பெங்களூரு நீதிபதி முன்பு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் appeared first on Dinakaran.