மதுராந்தகம்: எடையாளம் கிராமத்தில் கொத்தடிமை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எடையாளம் கிராமத்தில் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் மீட்பு மேம்பாட்டுக்கான ஆதிவாசி நல சங்கத்தின் அலுவலக திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன. இந்த விழாவிற்கு செய்யூர் வட்டாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார்.
இதற்கு முன்னதாக இணை இயக்குனர் சின்னராசு அனைவரையும் வரவேற்றார். இதில், அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் பவ்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியின்போது, கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
The post கொத்தடிமை ஒழிப்பு தினம் உறுதிமொழி appeared first on Dinakaran.