அவர் கள் அருகிலேயே பைக் நின்றது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து 3 பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், மனைவி, மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு முத்துக்குமார் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா வேறு ஏதாவது பிரச்னையா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்குட்டை தண்ணீரில் மூழ்கடித்து மனைவி, மகனை கொன்றுவிட்டு என்எல்சி ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.