நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ‘‘ஆட்சேபம் இல்லாத நிலங்களில் வசித்து வரும் 86 ஆயிரம் குடும்பங்களுக்கு, அடுத்த 6 மாதங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆட்சேபனைக்குரிய இனங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் ஆய்வு குழுக்களை அமைக்க வேண்டும்.
The post 86,000 பேருக்கு பட்டா கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு appeared first on Dinakaran.
