மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி கைது

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.12: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(35), கூலி தொழிலாளி. இவரது மனைவி மணிமொழி(25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சக்திவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4ம்தேதி இரவு, மது குடித்து விட்டு வந்த சக்திவேல், மணிமொழியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து, மணிமொழியின் தலையில் சக்திவேல் அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து அலறிய அவரை உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

The post மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: