இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தொழுவூர் நரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் தேசிங்கு, கமலேஷ், மாநகரச் செயலாளர் சன்பிரகாஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ், லட்சுமி, செந்தாமரை, கந்தன், மோகன், சுரேஷ், பிரவீன்குமார், சந்திரன், யோகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருவள்ளூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் சுவாமிகளின் 50ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ தீர்த்தீஸ்வரா ஆலயத்திலிருந்து காலை 7 மணியளவில் கயிலாய இசையுடன் வள்ளலார் வீதி உலா நடைபெற்றது. பிறகு காலை 9 மணியளவில் வள்ளலாருக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
The post திருவள்ளூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் சுவாமிகளின் தைப்பூச பெருவிழா: அமைச்சர் நாசர் உணவு வழங்கினார் appeared first on Dinakaran.
