பாரீஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாடு தொடங்கியது. பாரிஸில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாரிஸில் நடைபெறும் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பரவலாக்க வேண்டும். மனித இனத்திற்கான வரைவுகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(Al) பயன்படுகிறது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றின் மறுவடிவமைப்பிற்கு ஏ.ஐ. உதவுகிறது. AI தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது. பாதுகாப்பான முறையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவரும் கொண்டுசெல்ல வேண்டும். விவசாயம் மற்றும் கல்வித் துறையில் ஏ.ஐ. மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம்.உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறும்.ஏஐ உச்சிமாநாட்டை இணைத் தலைமை தாங்கி நடத்த அழைத்த மேக்ரானுக்கு நன்றி,”இவ்வாறு தெரிவித்தார்.
The post AI தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது : பாரிஸில் சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.
