ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்

பூந்தமல்லி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சத்திய முழக்க மாநாடு பூந்தமல்லியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அஜாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம், சலீம், ஜாபர், பக்ருதீன், பிலால், அப்துல்லா, ஹாமீம், சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் அப்துல் ஹரீம், மாநிலச் செயலாளர் சபீர் அலி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியில் ஒற்றுமையின்மை காரணமாகவே டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் சுயநலன்களை விட்டு நாட்டின் நலனுக்கு எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் அடித்தட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்டச் செயலாளர் மன்சூர் நன்றி கூறினார்.

The post ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: