குடும்ப பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பலி

பெரம்பூர்: புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம் (45). இரு சக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி நாசிரா பேகம். 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் அப்துல் சலாம் மற்றும் மனைவி இருவரும் மகளை டியூஷனில் படிக்க விட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த அப்துல் சலாம் திடீரென பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அப்துல் சலாம் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், தற்போது அப்துல் சலாம் உள்ள வீடு அவரது மாமியாருக்கு சொந்தமானது என்றும், வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து அப்துல் சலாம் பணம் வாங்கியிருந்ததும் அதன் பிறகு அவரது மாமியார் பத்திரத்தை மீட்டு தற்போது அந்த வீட்டை அப்துல் சலாமின் மனைவியின் அக்காவிற்கு விற்று விட்டதும், அதனால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்ததால் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு மன உளைச்சலில் அவர் தீ குளித்ததும் தெரிய வந்தது.

The post குடும்ப பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: