பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி சிந்தூரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் இடையில் மோதல் நிலவுகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிடும் பதிவும், ஊடங்களில் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி சிந்தூரி தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கு பெங்களூரு 5வது சிசிஎச் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பாது, நீதிபதி பேசும்போது, நீங்கள் பொறுப்புள்ள பதவியில் உள்ளீர்கள். உங்கள் முன்னாள் பல பணிகள் உள்ளது. அதை கவனிப்பதை விட்டு, இப்படி நீதிமன்றத்தில் வந்து கால நேரத்தை வீணாக்குவது சரியா? நீங்கள் இருவரும் ஏன் சமாதானமாக போகக்கூடாது என்று கேட்டதுடன் இருவரும் ‘‘ஒன் மினிட் அபாலஜி’’ என்ற புத்தகம் படித்து விட்டு வாருங்கள் என்று கூறினார்.
The post ஐஏஎஸ் ரோஹிணி, ஐபிஎஸ் ரூபா ஆகியோர் ‘ஒன் மினிட் அபாலஜி’ புத்தகம் படிக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம் ஆலோசனை appeared first on Dinakaran.