திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன்(24). குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது இவருக்கு களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா(23) என்ற மாணவியுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், ராணுவ வீரர் ஒருவரை மணப்பதற்காக கடந்த 2022ல் ஷாரோனுக்கு காஷாயத்தில் பூச்சிக் கொல்லி கலந்து கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா மீது கேரள போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஜனவரி 20ம் தேதி நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது தாய் சிந்துவை இந்த வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம், தாய்மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3ஆண்டுகள் தண்டனை விதித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி கேரள அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கிரீஷ்மா அப்பீல் appeared first on Dinakaran.