இவர்களில் சில அகாடாவினர், 15ம் தேதி ஹரித்துவாரில் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பின்னர் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு துறவிகள், தங்கள் முகாம்களுக்கு திரும்புவார்கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு உதாசி மற்றும் சில வைஷ்ணவ அகாடாக்களின் துறவிகள் செல்வார்கள். மகா சிவராத்திரிக்கு பிறகே கும்பமேளா நிறைவடையும். இந்நாளில் வரும் ராஜ குளியலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அகாடாக்களுக்கு 7ம் தேதி புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அன்றயை தினமே அகாடாக்கள் நிர்வகிக்கும் கோயில்களுக்கான மஹந்த் எனும் தலைமை பண்டிதர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு பிறகு ஐதீக முறைப்படி, கடி, பகோடி (மோர் குழம்பு மற்றும் பகோடா) சமைத்து உண்ட பின் பிரயாக்ராஜில் இருந்து சென்று விடுவார்கள்.
The post கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாரணாசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள் appeared first on Dinakaran.