இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.289 கோடியில் இது அமைய உள்ளது. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், வரும் 13ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
The post வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.
