சொராபுதீன் என்கவுன்டரில் சிக்கிய குஜராத் ஐபிஎஸ் அதிகாரி திடீர் ஓய்வு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 1999ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அபய் சுடாசமா. 2010ல் சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், 2015ல் விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு குஜராத் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (ஏடிஜிபி) பதவி உயர்வு பெற்றார். காந்திநகரில் உள்ள குஜராத் போலீஸ் அகாடமியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்கள் இருக்கிறது. அதற்கு முன்பு அவரது பதவியை அவர் ராஜினாமா செய்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post சொராபுதீன் என்கவுன்டரில் சிக்கிய குஜராத் ஐபிஎஸ் அதிகாரி திடீர் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: