கும்பமேளாவில் வசந்த பஞ்சமி எந்த தடையும் இன்றி தொடர்ந்த அமிர்த ஸ்நானம்

மகாகும்ப் நகர்: உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நடந்து வருகின்றது. கடந்த 29ம் தேதி மவுனி அமாவாசையையொட்டி நடந்த கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று வசந்த பஞ்சமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கானோர் நேற்றும் அமிர்த ஸ்நானம் செய்வதற்கு திரண்டனர்.

மவுனி அமாவாசையன்று போன்று இல்லாமல் இந்த முறை வெவ்வேறு படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடினார்கள். அதிகாலையில் நாக சாதுக்கள் உட்பட பல்வேறு அகாராக்கள் திரிவேணி சங்கமத்தில் அமிர்த ஸ்நானம் செய்தனர். காலை 10 மணிக்கு பின் இதர பக்தர்கள் புனித நீராடினார்கள். ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது பூமாரி மொழியப்பட்டது.

The post கும்பமேளாவில் வசந்த பஞ்சமி எந்த தடையும் இன்றி தொடர்ந்த அமிர்த ஸ்நானம் appeared first on Dinakaran.

Related Stories: