*நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது.
*இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் வளர்ச்சி, இளைஞர் நலன், சிறுகுறு தொழில், ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் விளங்குகிறது. வளர்ச்சியடைந்த தேசம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
*உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
*அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்.இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்.
*சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
*கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
*தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும். ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்.
*தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
*பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
*சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
The post கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு.. பீகாரில் தாமரை விதைகளுக்காக புதிய வாரியம்: ஒன்றிய பட்ஜெட் 2025 appeared first on Dinakaran.