டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் தொடர்ந்து முன்னிலை

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் உலக சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். மற்றொரு கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.
10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி, மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.

The post டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: