நாமக்கல், ஜன.30: நாமக்கல் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்ட கிளை சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் வடிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
