டெல்லி : புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-2026ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு..
*புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது. மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக அதிகரிப்பு.
* வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு
*நேரடி வரி விதிப்புக்காக கொண்டுவரப்படும் மசோதா 50% பழைய சட்டத்தை உள்ளடக்கியிருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.வருமான வரி பிடித்தத்திற்கான படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படும்.மேலும் வழக்கு தொடர்வதை குறைக்கும் வகையிலும், வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையிலும் புதிய மசோதா இருக்கும் என அறிவிப்பு.
*லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்கவரி குறைக்கப்படுவதால், மின்சார வாகனங்களுக்கான சுங்க வரி குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டிவி பேனல்களுக்கான சுங்க வரி 20% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு.
*மொத்த உற்பத்தியில் 4.8% பற்றாகுறை உள்ளது. இது அடுத்த ஆண்டு இது 4.4%ஆக குறையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
*36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் ஒன்றுக்கு மட்டும் வசூலிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
*காப்பீட்டு துறையில் இதற்கு முன்னர் 74% அந்நிய முதலீடு இருந்த நிலையில், அதை 100% அந்நிய முதலீடாக உயர்த்தி அறிவிப்பு வெளியீடு.
*அணு உலைகள் மூலமாக 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யவும், சிறு மற்றும் நடுத்தர அணு உலைகள் அமைக்க ரூ.20,000 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியீடு
*முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
*சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 -ஆக அதிகரிப்பு
*மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு.
“சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில், Al மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
The post ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது; 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.