இந்த மருத்துவமனை மூலம் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டரின் பொது நல நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 3 டயாலிசிஸ் கருவிகள் கொண்ட புதிய டயாலிசிஸ் பிரிவு இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டயாலிசிஸ் பிரிவு திறப்பு நிகழ்ச்சி, இணை இயக்குனர் சுகாதாரம் (பொ) சேகர் தலைமையில் நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய டயாலிசிஸ் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது, புதிய டயாலிசிஸ் பிரிவு மேலும் 6 படுக்கைகள் கொண்ட பிரிவாக விரைவில் தரம் உயர்த்தப்படும். இந்த டயாலிசிஸ் சிகிச்சை பிரிவினை சிறுநீரக நோயாளிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
The post பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் டயாலிசிஸ் பிரிவு appeared first on Dinakaran.
