வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலூர் மகன் பழனிசாமி(34). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பழமலை மகள் மகேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி அன்று தனது மனைவியை அழைப்பதற்காக பழனிசாமி மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் சகோதரர்கள் பார்த்திபன்,

பாலாஜி மற்றும் உறவினர்கள் சரவணகுமார், அபிஷேக், மணிமேகலை, பழமலை, மாலதி, திராவிட செல்வி உள்ளிட்ட8 பேர் சேர்ந்து பழனிசாமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பழனிசாமி விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், பார்த்திபன், பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பார்த்திபன் மற்றும் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: