உடனடியாக அவர் அப்புறப்படுத்தப்பட்டார். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீட் நகராட்சி நிர்வாகத்தில் நடந்த மோசடி தொடர்பாக தலைமை நிர்வாக அதிகாரி நீட்டா அந்தாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துலேவில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மாநில அமைச்சர் ஜெய்குமார் ராவல் முன்னிலையில் கொடியேற்றும் விழா நடந்தது. அப்போது வாவ்தியா பாட்டீல் என்ற நபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அவரும் தடுக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷிர்பூர் நகரில் உள்ள மாட்டு கொட்டகைகளில் இருந்து சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்வதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். இருந்தும் தற்கொலைக்கு முயன்ற பிரிவின் கீழ் வாவ்தியா பாட்டீல் கைது செய்யப்பட்டார்’ என்று கூறினர்.
The post மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் 2 அமைச்சர்கள் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி: இரு வேறு சம்பவத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.
