இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும், பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையில் 2 மாபெரும் மலைகள் அமைந்துள்ளன என்று ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கட்டுரையில், பூமியின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானது. இந்த இரண்டு சிகரங்களும் பூமியின் மேற்பரப்புக்கு கீழே ஆழமாக அமைந்துள்ளன.
சுமார் 1,000 கிலோமீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தின் 8.8 கிலோமீட்டர் உயரத்தை விட மிக அதிகம். இந்த மலைகள் குறைந்தது அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்த இரு மலைகளின் வரலாறானது, பூமி உருவாகும் முன்பாக 4 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.
