பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு

சென்னை: பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தர்பங்கா வீராங்கனைகள் விதிகளை மீறி விளையாடியதாக நடுவரியம் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து போட்டி நடுவருக்கும், தமிழ்நாடு வீராங்கனைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடுவரை தட்டிக் கேட்ட தமிழ்நாடு வீராங்கனைகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீராங்கனைகளை தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் விவகாரத்தை உடனடியாக தலையிடுமாறு மாவட்ட எஸ்.பி.க்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கபடி பயிற்சியாளரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு நாளை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர் என்று கூறினார்.

 

The post பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: