இதையடுத்து தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடப்பதாக கூறும் சூடானின் காட்சிகளால் பல தெற்கு சூடான் மக்கள் கோபமடைந்துள்ளனர். இதனால் தெற்கு சூடானில் உள்ள சூடானிய வர்த்தகர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இதன்பிறகு கடந்த 17ம் தேதியன்று தெற்கு சூடானில் ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் விதித்தனர். இந்நிலையில், அண்டை நாடான சூடானில் வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் அறிவித்துள்ளது. பொதுமக்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தி தேசிய தொடர்பு ஆணையம் (NCA) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவின்படி, 90 நாட்கள் வரை நீட்டிக்கக்கூடிய தற்காலிக தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் இந்த உத்தரவு நீக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
The post சூடானில் வன்முறை.. சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவு..!! appeared first on Dinakaran.
