ஆன்லைனில் அஞ்சல்தலை கண்காட்சி: 16 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறை மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் அஞ்சல்தலை கண்காட்சியை 16 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் துறை தனது 13வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சியை ‘அஞ்சல் தலை சொல்லும் கலை’ என்ற தலைப்பில் கடந்த 7ம் தேதி முதல் நடத்தியது. கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் என்ற கருப்பொருளில் நடத்தியது. இந்த ஆன்லைன் கண்காட்சியில் மொத்தம் 289 பிரேம்கள் காட்சிப்படுத்தப்பட்டன. போட்டி வகுப்பின் கீழ் 214 பிரேம்கள் காட்சிப்படுத்தப்பட்டன. விழாவில், நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரேம்கள் மற்றும் கண்காட்சியாளர்களுக்கு முறையே 3 தங்கம், 12 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களும், 18 பட்டச்சான்றிதழ் மற்றும் 11 சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. 4 நாட்களில் சுமார் 16 ஆயிரம் பேர் மெய்நிகர் தபால்தலை கண்காட்சியை இணையதளம் வாயிலாக கண்டுகளித்துள்ளனர். இந்த இணையதளம் ஒரு மாத காலத்திற்கு பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என தமிழ்நாடு அஞ்சல் துறை தெரிவித்துள்ளது….

The post ஆன்லைனில் அஞ்சல்தலை கண்காட்சி: 16 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: