இதை கேட்ட நீதிபதிகள், அந்த குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்று கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், மதுவிலக்கு துறை இணை கமிஷனர், சென்னை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர், டாஸ்மாக் துணை மேலாளர், டாஸ்மாக் சட்ட அதிகாரி, செங்கல்பட்டு மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் உள்ளனர் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த குழுவில் தமிழக டிஜிபி, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மற்றும் தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆணையர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். டிஜிபி தலைமையில் இந்த குழு செயல்பட்டு 6 வாரங்களில் முடிவெடுத்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர டிஜிபி தலைமையில் குழு: 6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
