அதேபோன்ற சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.மணி (எ) நிர்மாலயா, பி.க.ராஜேந்திரன் (எ) இந்திரன், கவுரி கிருபானந்தன், க.பூரணச்சந்திரன், தி.மாரிமுத்து (எ) யூமா வாசுகி, சா.முகம்மது யூசுப் (குளச்சல் யூசப்), கே.வி.ஜெய, கண்ணையன் தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயகத்தில் வைத்து வழங்கினார்.
மேலும் புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியர் மு.வளர்மதி, கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநர் மதிவாணன் ஆகியோரின் தொகுதிகளை முதல்வர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சாகித்திய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
