இதன்படி, மஸ்கட்டிலிருந்து வரும் ஓமன் ஏர்வேஸ் விமானம், துபாயிலிருந்து வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து வரும் ஏர்ஏசியா விமானம் அதிகாலை சென்னைக்கு வராமல், தாமதமாக வந்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், லங்கன் ஏர்லைன்ஸ் போன்றவை போகி தினத்தில் தங்களின் பயண நேரத்தை மாற்றியமைக்க ஆலோசித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும் முறையாக குறுந்தகவல் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ உள்பட பல்வேறு உள்நாட்டு விமானங்களும் போகி பண்டிகையன்று ஏற்படும் கடும் பனி மற்றம் புகைமூட்டத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க, அதிகாலை மற்றும் காலைநேர விமானசேவை நேரங்களை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான பயணிகளுக்கு முறையாக குறுந்தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தெருக்களில் தீயிட்டு எரிக்க வேண்டாம்’ என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post போகியன்று கடும் பனி, புகைமூட்டம் காரணமாக: சென்னையில் விமான சேவை நேரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.
