தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தனது தொகுதியில் உள்ள கழிவு நீர் குழாய்களை மாற்றி அமைப்பது தொடர்பாகவும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில், ‘திரு.வி.க நகர் தொகுதியில் 112.75 கி.மீ நீளம் உள்ள கழிவு நீர் குழாய்களில் 30.27 கீ.மீ நீளம் உள்ள கழிவு நீர் குழாய்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

108.5 நீளமுள்ள குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை திரு வி.க நகர் தொகுதி சுப்பராயன் தெருவில் 30 ஆண்டுகள் பழைமையான கழிவு நீர்க் குழாய்கள் , வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய குழாய்களாக மாற்றியமைக்கப்படும். மற்ற தெருக்களுக்கும் புதிய குழாய்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் மாற்றி அமைக்கப்படும்.

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் நடவடிக்கையாக 213 நவீன கழிவு நீர் அகற்றும் எந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 7 ஆண்டுகள் வழங்கும் வகையில் 500 கோடி மானியம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது” என்று பதில் அளித்தார்.

The post தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: