சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசுகையில் , “ திருவள்ளூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரியை சென்னைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா. மேலும், சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தை கூகுள் மேப்பில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.. பார்த்தாலே கண்ணில் ரத்தம் வழிகிறது என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து, அமைச்சர் ரகுபதி பேசுகையில், சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு, அமைக்கப்பட்ட ஆணையம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னைக்கு வெளியே பட்டறைப்பெரும்புதூரில் புதிய சட்டக் கல்லூரி கட்டப்பட்டது.

சென்னையில் சட்டக் கல்லூரி இருந்த இடம் இப்போது உயர் நீதிமன்றத்திடம் ஓப்படைக்கப்பட்டு விட்டது. இனி அதை கேட்டுப்பெற முடியாது. எனவே இனி சென்னை மாநகரப் பகுதிக்குள் சட்டக் கல்லூரி புதிதாக சாத்தியம் இல்லை. ஆணையத்தின் அறிக்கையை படித்துப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சென்னையில் தொடங்க வழி இருக்கும் என்றால் முதலமைச்சருடன் கலந்து பேசி இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: