கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளதால், வரும் தமிழ் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல, தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஏற்கனவே ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வர இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி ஸ்ரீராம், ஏற்கனவே நாங்கள் இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று நிராகரித்த பிறகு மீண்டும் நீங்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது என்றும். இது போன்று தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டால், மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இந்த பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
The post பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.