மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு

 

கோவை, ஜன. 10: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட்டு, வாடகை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 66வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் சுகாதார ஆய்வாளர் அறை, உணவு பாதுகாப்பு அலுவலர் அறை தவிர, அப்பகுதில் ‘எல்’ வடிவில் உள்ள மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், 67வது வார்டுக்கு உட்பட்ட ராம்நகர் பட்டேல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 7 கடைகளுக்கும் 15 சதவீதம் வாடகை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மண்டலம் முழுவதும் 3 ஆண்டு காலம் ஒப்பந்தம் முடிய உள்ள அனைத்து மாநகராட்சி கடைகளுக்கும் 15 சதவீதம் வாடகை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வு, 31.3.2027 வரை அமலில் இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

The post மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: