தொண்டாமுத்தூர், டிச.30: கோவை மாவட்டம் வடவள்ளி பகுதி பொம்மணம்பாளையத்தில் அமைந்துள்ள மாநில அளவில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளனர். TNSSCA மாநில சாம்பியன்ஷிப் மாநில அளவிலான போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தி அத்யாயனா பள்ளி மாணவர்கள் ஜஸ்மிதா நான்கு பிரிவில் 4 தங்கப்பதக்கமும், எவ்லின் 3 பிரிவுகளில் 3 தங்கப்பதக்கமும், ஜெரோம், பெலிக்ஸ், ரக்சன் ஆகியோர் ஒரு தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் துணை இயக்குநர் சௌமியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மாநில ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தி அத்யாயனா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- அத்யானா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி
- தொண்டாமுத்தூர்
- பொம்மனம்பாளையம்
- வடவள்ளி
- கோயம்புத்தூர் மாவட்டம்
- TNSSCA மாநில சாம்பியன்ஷிப்
- காஞ்சிபுரம்
- அத்யாயனா…
