பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.10: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில் நிலையத்தில், ரயில்வே துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார், மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நடைமேடை, டிக்கெட் வழங்கும் இடம், கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது, பொம்மிடி தென்னக ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் அறிவழகன் உள்ளிட்டோர், பொம்மிடி ரயில் நிலையத்தில், கோவை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்ட மேலாளரிடம் மனு அளித்தனர். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
The post பொம்மிடி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.