செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மார்க்கெட் பகுதிக்கு கரும்பு மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளதை அடுத்து விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழர் திருநாள் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்களை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மார்கெட் பகுதியில் கரும்பு மற்றும் பல வகையான பழ வகைகள் வர துவங்கியது. ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டு பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைத்தில் உள்ள மார்கெட் பகுதிக்கு கரும்பு, சோளம், சக்கரவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கி என பல வகையான பொருட்கள் விற்பனைக்கு வருகை தந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கரும்பு வரத்து மார்க்கெட்க்கு குறைவாக வந்துள்ளதாகவும், விலையும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஒரு கரும்பின் விலை ₹5 முதல் ₹10 வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக வந்துள்ள கரும்பு மற்றும் பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்ற
னர்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் கரும்பு, பழங்கள் விற்பனை படுஜோர்: ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் appeared first on Dinakaran.