ஆனால் சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ஒரு லட்சம் குடும்பத்திற்கு நீங்கள் சமைத்து உணவு கொடுத்து மக்களிடம் பாராட்டுகளை பெற்று இருக்கிறீர்கள். மெரினாவில் கடல் அலையைவிட உணவுத் திருவிழாவில் மக்களின் கூட்டம் அதிகம் இருந்ததை பார்க்க முடிந்தது. மகளிர் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிக மிக முக்கிய இடத்தில் உள்ளது. அதனால்தான் நமது திராவிட மாடல் அரசு மகளிருக்கு என்று புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளோம். உணவுத் திருவிழாவில் 5 நாட்களில் மூன்றரை லட்சம் மக்கள் உணவை சுவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.