நாகையிலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடியை சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
The post எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.