நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவு

காத்மாண்டு: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது.

The post நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: