கோத்தகிரி நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்

 

கோத்தகிரி, ஜன.7: கோத்தகிரி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாத கோடை சீசன் மட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு, வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்வர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் வரும் நிலையில் கோவை, ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லார், பர்லியார் சோதனை சாவடி வழியாகவும், சமவெளி பகுதிக்கு செல்லும் போது கோத்தகிரி வழியாக குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

குறிப்பாக, இரண்டாம் சீசன் துவங்கி உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்க எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோத்தகிரி நகர் பகுதியில் போதிய வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்கள் நிறுத்த ஏற்ப்பாடு செய்யப்பட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: