ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டம்

புழல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சோழவரம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சாலை மறியல் போராட்டத்துக்கான பரப்புரை கூட்டம் நேற்று நடந்தது.

மாநில துணை தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி சேகர், மாவட்ட துணை தலைவர் மீரா கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மாணிக்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரூபேந்திர ராவ் ஆகியோர் கலந்துகொண்டு சாலை மறியல் குறித்து உரையாற்றினர்.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: