கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். பொதுவாக காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. மேலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கடலோர தமிழகத்திலும் உள் தமிழகத்திலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதேநிலை 13ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரியையொட்டி இருக்கும்.
The post மலைப்பகுதியில் உறைபனி பெய்யும் கடலோரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.