கும்மிடிப்பூண்டி: கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் மற்றும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் இருந்து கீழ்முதலம்பேடு, கவரப்பேட்டை, தெலுங்கு காலனி, சக்தியவேடு சாலை, உத்தரகுளம் பழவேற்காடு சாலை, ராஜா தெரு, பாலிகா பேட்டை, அரியத்துறை, ஏரிப்பேட்டை, அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் மற்றும் பம்பு ஆபரேட்டர்கள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களைக் கொண்டு தினந்தோறும் குப்பை அள்ளுதல், குடிநீர் சப்ளை செய்தல் ஆகிய பணிகளை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் செய்து வந்தார்.
நேற்று ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி. நமச்சிவாயம் தலைமையில் தூய்மை பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், பம்பு ஆப்ரேட்டர்கள், எலக்ட்ரிஷியன் ஆகிய பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து கவுரவப்படுத்தினர். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு தூய்மை பணியாளர்களும் சாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post கீழ்முதலம்பேடு ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு appeared first on Dinakaran.