உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி நிறைவு விழா 25 வகையான பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்த 1,500 பெண்கள்: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

ஆவடி: ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி நிறைவு விழாவில் 25 வகையான பாரம்பரிய அரிசியில் 1500 பெண்கள் பொங்கல் வைத்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாள் விழா ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. கவிஞர் ஜெயக்குமார் முன்னிலையில், கனிமொழி, சென்னை மாநகராட்சி 11வது மண்டலக்குழு தலைவர் வே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 1,500 பெண்கள் ஒன்றுகூடி 25 வகையான அரிசியில் ஐந்து கிலோ எடை கொண்ட 25 பானைகளில் பொங்கல் வைத்தனர். அத்துடன் கோலப் போட்டியில் 33 நிமிடங்களில் 60 வகையான பிரம்மாண்ட கோலங்களை போட்டு அசத்தினர். மேலும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் விவசாயத்தை போற்றும்வோம் என்ற எழுத்து வடிவில் நின்று விவசாயிகளுக்கு மரியாதை செய்தனர். இந்த நிகழ்வு சர்வதேச பிரைட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, காரப்பாக்கம் கணபதி எம்எல்ஏ, உதவி இயக்குனர் பரணி, உதவி செயல் பொறியாளர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வேதநாயகி, துணை வட்டார அலுவலர் சார்லஸ், ஒன்றிய செயல் பொறியாளர் யாஸ்மின், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழு தலைவர் கிரிஜா, துணைத் தலைவர்,

ஞானப் பிரகாசம், ஒன்றியக்குழு உறுப்பினர், வினோத், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், துணைத் தலைவர் யுவராசா, வார்டு உறுப்பினர்கள் அந்தோணி தியாகராஜன், லீமா, கவிதா, செல்வகுமார், உமா, உமாமகேஸ்வரி, பாபு, கரன்சிங், பத்மாவதி, திலகவதி, சண்முகம், ஹேமலதா, பிரபாவதி, ஊராட்சி செயலர் ஸ்ரீதர், மாறன்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கோலப் போட்டி, பொங்கல் வைத்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். முன்னதாக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

The post உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி நிறைவு விழா 25 வகையான பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்த 1,500 பெண்கள்: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது appeared first on Dinakaran.

Related Stories: