திருவனந்தபுரம்: நடிகை ஹனி ரோஸின் ஃபேஸ்புக் பதிவின் கீழ் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக ஷாஜி என்ற நபர் கைது செய்யப்பட்டார். தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஹனி ரோஸ் கூறியிருந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.